zoomText
  • A
  • A
  • A
pdf
PDF generation in progress.....

LEO XIV

GENERAL AUDIENCE

St Peter's Square
Wednesday, 1st October 2025

[Multimedia]

___________________________________

AR  - DE  - EN  - ES  - FR  - HR  - IT  - PL  - PT  - TA  - ZH_TW

SUMMARY OF THE HOLY FATHER'S WORDS

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைச் சுருக்கம்:

அன்புள்ள சகோதர சகோதரிகளே, இயேசுவே நமது எதிர்நோக்கு என்னும் நமது தொடர் மறைக்கல்வி உரையில் நமது எதிர்நோக்கு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையான இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி இன்று நாம் தியானிக்கின்றோம். ஒன்றிப்பை மீட்டெடுக்கவும், மறுதலிப்பு, காயங்கள் மற்றும் இறப்பைக் கூட மிஞ்சும் அவரது அன்பை வெளிப்படுத்தவும் மிகுந்த சாந்தத்துடன், இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுகிறார். இந்த அன்பின் அடையாளமாக, இயேசு திருத்தூதர்களுக்கு அவருடைய அமைதி மற்றும் தூயஆவியார் என்னும் இரண்டு கொடைகளை வழங்குகிறார். "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று அவர் தனது காயங்களை அவர்களுக்குக் காட்டுகிறார். இது அவரைக் கைவிட்டுச் சென்றவர்களை அவமானப்படுத்துவதற்காக அல்ல, மாறாக அவருடைய மன்னிப்பையும் அன்பையும் அவர்களுக்கு உறுதி செய்வதற்கும், சிலுவையில் அவர் இறந்தது நம்பிக்கையின் அடையாளமாக மாற்றப்பட்டுள்ளது என்பதைக் கற்பிப்பதற்கும் இவ்வாறு செய்கின்றார். தூய ஆவியாரை வழங்குவதன் வழியாக, உலகில் அவருடைய கருவிகளாக இருக்கும் பணியை இயேசு திருத்தூதர்களிடம் ஒப்படைக்கிறார். இந்தப் பாடம் நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. கடவுள் நம்மை மன்னிக்கிறார், அவர் நம்மை உயர்த்துகின்றார், நம்மைப் புதிதாக அனுப்புகிறார். கிறிஸ்துவின் அமைதி, நம்பிக்கை மற்றும் அன்பை உடைந்த உலகத்திற்குக் கொண்டு வருவதன் வழியாக நாமும் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியான சான்றுகளாக இருப்போமாக.

இப்போது திருத்தந்தை அவர்கள் தனது வாழ்த்துக்களை ஆங்கில மொழியில் எடுத்துரைப்பார்.


HOLY FATHER

I greet the Tamil speaking pilgrims and visitors taking part in today’s audience.  As we begin October, the month dedicated to the holy Rosary, I invite you to pray the rosary every day for peace in our world.  May you be faithful instruments of reconciliation in your daily lives and may the peace of the risen Christ be with you all!  God bless you.


SPEAKER

இன்றைய மறைக்ல்லவி உரையில் பங்கேற்கும் தமிழ் பேசும் திருப்பயணிகள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். புனித செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட  மாதமான இந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நமது உலகில் அமைதிக்காக ஒவ்வொரு நாளும் செபமாலை செபிக்க உங்களை அழைக்கிறேன். உங்களது அன்றாட வாழ்வில் நல்லிணக்கத்திற்கான உண்மையுள்ள கருவிகளாக நீங்கள் இருங்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் அமைதி உங்கள் அனைவருடனும் இருக்கட்டும்! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.